வடகொரிய எல்லையில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்து தாக்கு தலை சந்திக்க தயார் என அறிவிப்பு

ஐ.நா. மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 4-ந் தேதி வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றி கரமாக நடத்தியது. அது அமெரிக்காவை தாக்க குறி வைத்தும் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் தென் கொரியாவில் அமெரிக்கா ராணுவ பயிற்சி நடத்தி வருகிறது. அதில் தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டு ராணுவ படைகள் ஈடுபட்டுள்ளன.

அதில் வடகொரியா எல்லையில் அமெரிக்காவின் அதிவேக ‘பி-1 பி லாஞ்சர்ஸ்’ ரக போர் விமானங்கள் தாழ்வாக பறந்து எச்சரிக்கை விடுத்தன. தென் கொரியாவில் குயாமில் உள்ள ஆன்டர்சன் விமான படை தளத்தில் இருந்து இந்த போர் விமானங்கள் பறந்தன.

 

அவற்றுடன் தென் கொரியா மற்றும் ஜப்பான் போர் விமானங்களும் பறந்து பயிற்சியில் ஈடுபட்டன. சுமார் 10 மணி நேரம் இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவின் ‘பி-1பி’ லாஞ்சர் அதிவேக போர் விமானங்கள் நீண்ட தூரம் பறந்து சென்று 900 கிலோ எடையுள்ள அணு குண்டுகளை வீசும் திறன் கொண்டது. இதன் மூலம் தாங்கள் எந்த வித தாக்குதலுக்கும் தயார் என வட கொரியாவுக்கு அமெரிக்கா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவங்களால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply