அமெரிக்கா: மிசிசிப்பியில் கடற்படை விமானம் விபத்து : 12 பேர் சடலம் கண்டெடுப்பு

அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் கேசி-130 ரக கடற்படை விமானம் விபத்துள்ளானது. ஆறு ஒன்றின் கடற்கரையை ஒட்டிய டெல்டா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.விமானம் விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அருகில் உள்ள மக்கள் அப்பகுதிக்கு வந்தனர். அங்கு விமானம் சுக்கு நூறாக சிதறி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. பின்னர் விபத்து நடந்ததை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கடற்படை காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கேப்டன் சாரஹ் பர்ன் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

இந்த விபத்தில் 12 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விபத்துள்ளான விமானத்தில் 16 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் தேடுதல் பணிகள் அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர். இருட்டில் சடலங்களை தேடும் பணிகள் கடினமாக உள்ளதாக அவர்கள் கூறினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply