அல்கொய்தா தீவிரவாதிக்கு உதவிய அமெரிக்க வாழ் இந்தியருக்கு 27 ஆண்டு ஜெயில்

அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர் யாக்யா பரூக் முகமது. திருமணமானவர். இவர் ஒகியோ பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்துள்ளார்.இவர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஏமன் சென்ற இவர் சதி திட்டத்துக்காக அந்த இயக்கத்துக்கு 22 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுத்து உதவியுள்ளார். மேலும் அமெரிக்க அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்.

இத்தகவல்கள் உளவுத் துறை விசாரணையில் தெரிய வந்தது. எனவே கைது செய்யப்பட்ட இவர் மீது டோலிடோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 27 வருட சிறை தண்டனை விதித்தது. அமெரிக்க ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அவர் விளங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 27 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த பின் அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply