ஜப்பானில் வெள்ள பாதிப்புக்கு 25 பேர் பலி – பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதமர் அபே நேரில் ஆய்வு
ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுள்ளது.மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து பல இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தெற்கு ஜப்பானின் கைசு தீவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் ஷின்கோ அபே இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் அரசு விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்து கொடுக்கும் என பிரதமர் ஷின்கோ அபே உறுதியளித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply