இன்று நண்பகலுக்குள் எரிபொருள் விநியோகம் வழமைக்கு : அரசாங்கம் உறுதி
இன்று நண்பகலுக்குள் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.பெற்றோலிய வளத் துறை ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதனால், நாட்டிலுள்ள சகல எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருள் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு நேற்றிரவு ஜனாதிபதி எரிபொருள் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டுள்ளார்.
இதேவேளை, கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலுள்ள ஊழியர்கள் சகலரும் இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டு இராணுவம் அதனைக் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
இந்நிலையிலேயே அரசாங்கம் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply