இலங்கை தொடர்பில் கட்டாரின் முக்கிய அறிவித்தல்
கட்டாருக்கான இலங்கை தூதரகத்தின் அனுசரணையின் கீழ், அந்த நாட்டில் பராமரிக்கப்படும் ஸ்டெஸபட் பாடசாலை தொடர்பில் விஷேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கட்டார் இராஜ்ஜியத்தில் இலாபம் ஈட்டாத பாடசாலையாக இதனை பராமரித்துச் செல்ல, இலங்கை தூதரகம் அனுசரணை வழங்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை தூதரகத்திற்கு அறிவிக்காமல் வௌியில் இருந்து நிதி சேகரித்தல், பாடசாலை நிதியை முறைகேடாக பயன்படுத்தல், பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காமை, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய முறையில் வேதனம் செலுத்தாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பெற்றோரால் பல்வேறு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளதாக, கட்டாருக்கான இலங்கை தூதுவரின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், இலங்கை வௌிவிவகார அமைச்சுக்கு அனுப்பவுள்ள அறிக்கைக்கு அமைய, விசாரணைகள் நிறைவடையும் வரை பாடசாலை கணக்கில் இருந்து பணம் எடுத்தலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு கணக்கு முடக்கப்பட்டமையால் பாடசாலை மூடப்படவோ அல்லது கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்போ ஏற்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோர் கட்டாருக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர்களை சம்பந்தப்பட்ட பாடசாலைக்கு அழைத்து செல்ல எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply