பெற்றோரின் சமாதியைப் புனரமைக்க அரச பணத்தைச் செலவிட்டாரா கோத்தா?
அம்பாந்தோட்டையில் மெதமுலன டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியகம் மற்றும் உருவச் சிலைகளை நிர்மாணிப்பதற்கு அரச பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியமைக்கு எதிரான வழக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.காணிகளை நிரப்பும் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்தின் நிதியே இவ்வாறு செலவிட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளபோதிலும் இதுவரை அவரை வழக்கில் சந்தேகநபராகச் சேர்க்கவில்லை.
தமது பெற்றோரின் சமாதியை நிர்மாணிப்பதற்காக தனது பொறுப்பின் கீழ் இருந்த அரச நிறுவனத்தின் பொதுப்பணத்தில் இருந்து 9கோடி ரூபாவைச் செலவிட்டு, கோத்தபாய ராஜபக்ச பாரதூரமான ஊழலை மேற்கொண்டுள்ளார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள மூத்த பெண் சட்டத்தரணி ஒருவர் காரணமாக கோத்தபாய வழக்கில் இருந்து தப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டுத் தொடர்பான ஆவணங்களுக்குப் பொறுப்பதாக இருக்கும் இந்தச் சட்டத்தரணி, கோத்தபாய ராஜபக்சவின் கையெழுத்து தெளிவாக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply