விசாரணைகள் முடியும் வரை ரவியை சர்வதேச விவகாரங்களில் தொடர்புபடுத்த வேண்டாம் : உதய கம்மன்பில
அமைச்சர் ரவி கருணாநாயாக்க மீதான விசாரணைகள் முடிந்து தீர்வு எட்டப்படும் வரையில் அவரை எந்தவித வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கும் தொடர்புபடுத்த வேண்டாம் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.அமைச்சர் ரவி கருணானநாயகவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை சமர்ப்பித்தது தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
குறித்த விசாரணையின் போது அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, எதிர்கால வெளிநாட்டு நடவடிக்கைகளில் அவர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவது எமது நாட்டுக்கு பிரச்சினையாகும் என குறிப்பிட்டார்.
இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply