சுவிட்சர்லாந்தில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உட்பட 3 பேர் பலி
சுவிட்சர்லாந்தில் சுவிஸ் ஏரோ கிளப் சார்பில் கோடைகால முகாம் நடை பெறுகிறது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் இருந்து 14 முதல் 16 வயது வரையிலான 192 டீன்ஏஜ் வயதினரும் பங்கேற்றுள்ளனர். இந்த முகாம் சுமார் ஒரு வாரம் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் (இலங்கை நேரப்படி அதிகாலை 1மணியளவில்) பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள 3 பேருடன் ஒரு குட்டி விமானம் புறப்பட்டு சென்றது.
இத்தாலி எல்லை அருகே கிராவுபண்டன் பகுதியில் கேன்டன் என்ற இடத்தில் பறந்த போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
அதில் விமானியும், பயணம் செய்த 2 டீன் ஏஜ் சிறுவர்களும் பலியாகினர். 17 வயது பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இல்லை.
விமானம் புறப்பட்ட 10 நிமிடத்தில் விபத்து நடந்துள்ளது. அது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply