வடமராட்சிப் பகுதியில் அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பு
வடமராட்சி, துன்னாலை பகுதியில் இன்று காலை விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு பஸ்களின் மூலம் இரவு விசேட அதிரடிப்படையினர் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளனர்.பெருமளவிலான பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குறித்த பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டதன் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த சுற்றிவளைப்பின்போது இதுவரையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, உரிய ஆவணங்கள் இல்லை என ஒரு சில வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் வீடு வீடாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply