இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி தாக்கலாம் என பீதி

இந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது.இதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்றும் அங்கு பூகம்பம் ஏற்பட்டது. சுமத்ராவை யொட்டியுள்ள மென்டாவி என்ற தீவின் அருகே கடலில் நிலநடுக்க மையம் இருந்தது. கடலுக்கு அடியில் 49 கிலோ மீட்டர் ஆழத்தில் அதன் மையப்புள்ளி அமைந்திருந்தது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 6.2 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

நிலநடுக்கம் ஏற்பட்டதும் வீடுகளும், கட்டிடங்களும் பயங்கரமாக குலுங்கின. மக்கள் அலறியடித்து வெளியே ஓடினார்கள். மீண்டும் பூகம்பம் ஏற்படலாம் என கருதி அவர்கள் வீட்டுக்குள் செல்லாமல் வெளியேயே இருக்கிறார்கள்.

கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டதால் சுனாமி தாக்கலாம் என்ற பீதி மக்களிடையே நிலவுகிறது. ஆனால் சுனாமிக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. எனவே அரசு தரப்பில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடவில்லை. ஆனாலும் மக்கள் பீதியுடனேயே இருக்கிறார்கள்.

இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply