பயங்கரவாதத்தின் ஊடாக பெறாதவற்றை அரசியல் சாசனத்தின் ஊடாக கொடுக்க வேண்டாம் : கோத்தபாய
பயங்கரவாதத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாதவற்றை அரசியல் சாசனத்தின் ஊடாக கொடுக்க வேண்டாம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். படைவீரர்களை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு சென்று தண்டனை விதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களே புதிய அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பயங்கரவாதத்தின் ஊடாக அடைய முடியாது போன இலக்குகளை புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக வழங்கப்படக் கூடாது என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply