பொன்சேகாவின் அறிவிப்பு நாட்டுக்கு எதிரானவர்களுக்கு மிகப் பெரும் ஆதாரம் : Dr. பிரதிபா

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான செயற்படும் குழுவுக்கு முக்கிய சாட்சியாக மாறியுள்ளதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யுத்தத்துக்கு நேரடியாக பங்களிப்புச் செய்த ஒர் இராணுவ தளபதியினால் முன்வைக்கப்படும் அறிக்கை அதிமுக்கியமானதாக கருதப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகிலுள்ள எந்தவொரு முன்னாள் இராணுவத் தளபதியும் இதுபோன்ற ஒரு அறிவிப்பை விடுத்ததில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை மற்றும் தகவல் ஆராயும் ஆணைக்குழுவை விரைவாக நியமிப்பது அரசாங்கத்தின் மீது தற்பொழுதுள்ள மிகப் பெரும் தேவையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply