பிரதேச செயலகங்களில் பெண்கள் அபிவிருத்தி உதவியாளராக நியமிக்கப்படுவர் : பிரதமர்

மகளிர் விவகார திட்டமிடல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காக பிரதேச செயலக மட்டங்களில் பெண்கள் அபிவிருத்தி உதவியாளராக நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம், அரச கொள்கை என்பன பற்றி அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறு வர்த்தக அபிவிருத்தியின் போது பெண்களுக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்புக்கள் பற்றி கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்த பிரதமர், அபிவிருத்திப் பணிகளுக்காக தனியார் முதலீடுகளை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதோடு அதன் போது பிரதேச மட்டத்திலான சிறு வர்த்தகங்களை மேம்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply