உலகின் மிக அதிகமான எடை கொண்ட எகிப்து பெண் அபுதாபியில் மரணம்
எகிப்து நாட்டை சேர்ந்த எம்மா என்ற 37 வயது பெண் சுமார் 500 கிலோ உடல் எடையுடன் உலகின் மிகவும் அதிகமான எடை கொண்ட பெண்ணாக ஊடகங்களின் கவனத்தை கவர்ந்தார். உடல் எடை குறைப்புக்காக இந்தியாவின் மும்பை நகரில் அவருக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதையடுத்து, 323 கிலோவாக எடை குறைந்த எம்மா, மேல்சிகிச்சைக்காக அபுதாபியில் உள்ள புர்ஜீல் ஆஸ்பத்திரியில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 20 சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் கடந்த ஐந்துமாத காலமாக அங்கு சிகிச்சை பெற்றுவந்த எம்மா, சிறுநீரகக் கோளாறால் இன்று மரணம் அடைந்ததாக புர்ஜீல் ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply