ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் பதவிக் காலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் அச்சுறுத்தல்களால் ஜப்பானின் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதை கருத்திற் கொண்டு முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்று பிரதமர் அபே நேற்று அறிவித்தார். தேர்தல் தேதியை அவர் அறிவிக்கவில்லை. வரும் அக்டோபர் 22-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் அந்த நாட்டின் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துக் கணிப்புகளின்படி அபேவின் லிபரல் டெமாகரடிக் கட்சிக்கு 44 சதவீதம், ஜனநாயக கட்சிக்கு 8 சதவீதம், டோமின் பர்ஸ்ட் கட்சிக்கு 8 சதவீத ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply