வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று: நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அறிவிப்பதற்கான நீதிமன்ற நடவடிக்கைகள் சற்று நேரத்திற்கு முன்னர் ஆரம்பமாகியுள்ளன.வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர். நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேம்சங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன்,பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆகியோர் யாழ். மேல் நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு வருகைத்தந்துள்ளனர்.
வித்தியாவின் படுகொலை கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேசத்தையே , யாழ். குடாநாட்டை நோக்கச் செய்த படுகொலையாக பதிவாகியது.யாழ்.புங்குடுதீவில் பல கனவுகளை சுமந்து பாடசாலைக்கு சென்றவள் மறுநாள் கூட்டுவன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply