வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்களை அகற்றுவது உசிதமானதல்ல : மஹேஷ் சேனாநாயக்க
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது உசிதமானதல்ல என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.கண்டி தலதா மாளிகையில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஒரு லட்சத்து 80 இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளார்கள் என வட மாகாண முதலமைச்சர் கூறியதாக இதன்போது இராணுவத் தளபதியிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அவர், இராணுவத்தின் எண்ணிக்கை குறித்து எவருக்கும் பொய்யுரைக்கத் தேவையில்லை.
வடக்கு கிழக்கில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டு இருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வுகளின் அடிப்படையிலான கருத்தின்படியே வடக்கில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், அவர்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டிருப்பது சாதாரணமானதாகும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் பயணத்தில் சிங்கள, பௌத்த மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதன் விளக்கம் முதலமைச்சருக்கு கிடைத்திருக்கும் எனத் தாம் நம்புவதாக இராணவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் அடிப்படையிலேயே படையினர் செயற்பாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இராணுவம் தொடர்பில் அவர்களுக்கு ஏதேனும் தெரிந்துகொள்ளவேண்டியதேவை இருப்பின், அது குறித்த வெளிப்படையான கலந்துரையடலுக்கு தாம் தயார் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply