ஒரு சில பிக்குகள் பாடம் படித்துக் கொள்ள வேண்டும் : மஹிந்த
சில பிக்குகள் மதம்பிடித்து செயற்படுவது நாட்டிலுள்ள ஏனைய பௌத்த பிக்குகள் அனைவரின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.கல்கிஸ்ஸை மியன்மார் அகதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிக்குகளின் நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இதுபோன்ற பிக்குகளின் நடவடிக்கைகளால், பிக்குகள் மீதான மதிப்பை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள். நம் நாட்டின் ஏனைய சமயத் தலைவர்களை உதாரணமாகக் கொண்டு பௌத்த பிக்குகள் தமக்கும், தமது சமயத்துக்கும் பெருமை சேர்க்க முயற்சிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply