நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : சசிகலாவுக்கு ஓரிரு நாளில் பரோல் கிடைக்க வாய்ப்பு எனத் தகவல்

கணவர் நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு ஓரிரு நாளில் பரோல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்லிரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் நடராஜன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இதனால் கணவரை பார்க்கச் செல்ல சசிகலாவுக்கு அனுமதி வழங்க கோரி அளிக்கப்பட்டுள்ள மனு மீது கர்நாடக சிறைத்துறை விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. சசிகலாவுக்கு உடனடியாக பரோல் கிடைக்கக் கூடும் என்பதால், அவர் இன்றே சென்னைக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. 15 நாட்கள் பரோல் விடுப்பு பெற்று சசிகலா சென்னையில் இருப்பார் என்று தெரிகிறது. அதிமுக-வில் இருந்து தனது குடும்பத்தை ஒதுக்கி வைத்து எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் அடுத்தடுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் சசிகலாவின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply