கிழக்கில் கருணா தலைமையில் களமிறக்கும் மஹிந்த அணி

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பொதுஜன பெரமுன, கிழக்கில் கருணா அம்மான் தலைமையில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மூன்று நாட்களாக பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

இந்நிலையில், மஹிந்த ஆட்சியில் பிரதியமைச்சராக செயற்பட்ட கருணா அம்மானின் துணையுடன் அடுத்த மாதம் கிழக்கில் பொதுஜன பெரமுன தீவிர பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply