கியூபா தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்கா: இருநாடுகளுக்கிடையே மீண்டும் மோதல்
அமெரிக்காவில் உள்ள 15 கியூபா தூதரக அதிகாரிகள் 7 நாட்களில் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க உள்துறை செயலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கியூபா – அமெரிக்க இடையே நீடித்த நீண்ட கால பகை முற்றும் விதமாக ஒபாமா அதிபராக பதவி வகித்த போது, கியூபாவில் அமெரிக்க தூதரகத்தை நிறுவினார். இதனையடுத்து, வாஷிங்டன் நகரிலும் கியூபா தூதரகம் அமைக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.
சில வாரங்களுக்கு முன்னதாக ஹவானா நகரில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. ஒலி தாக்குதலால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. மேலும், கியூபா அரசு இந்த குற்றச்சாட்டை மறுத்தது.
அமெரிக்க தூதரக அதிகாரிகளை கியூபா பாதுகாக்க தவறிவிட்டதாக கூறி, அனைத்து தூதரக அதிகாரிகளும் விடுப்பில் சென்றனர். இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள கியூபா தூதரக அதிகாரிகள் 15 பேர் கொண்ட குழு 7 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க உள்துறை செயலகம் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட கால மோதலுக்கு பின்னர் லேசாக மலர்ந்த அமெரிக்கா – கியூபா உறவு, தற்போது டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி முடிவுகளால் மீண்டும் பழைய நிலைக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply