மத்திய அமெரிக்காவின் கவுதமாலாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 ஆக பதிவு
மத்திய அமெரிக்காவின் கவுதமாலாவில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்தனர்.மத்திய அமெரிக்காவில் மெக்சிகோவிற்கு கீழே உள்ள நாடு கவுதமாலா. கவுதமாலா நாட்டில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கவுதமாலா நகரின் தென்மேற்கு பகுதியில் சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply