யாழில் 2 மில்லியன் பெறுமதியான போலி நாணயத்தாள்களை அச்சிட்ட தம்பதியர் கைது
போலி நாணயத்தாள்களை அச்சிட்டு உடைமையில் வைத்திருந்த இளம் தம்பதியர் நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம், அரியாலை – மணியந்தோட்டம் பகுதியிலுள்ள அவர்களுடைய வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டதோடு குறித்த தம்பதியிடமிருந்து 21 இலட்சத்துத்து 68 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அந்த நாணயத்தாள்களில் 5,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 400உம் 1,000 ரூபா போலி நாணயத்தாள்கள் 168உம் கைப்பற்றப்பட்டன.
அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பிறின்டர், ஸ்கானர் மற்றும் மடி கணினி என்பனவும் மீட்கப்பட்டன.
குறித்த இருவரையும் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 24 வயதுடைய இராசலிங்கம் லபீசன் அவருடைய மனைவியான 19 வயதுடைய கிருசாந்தி ஆகியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்கள் என யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply