அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பெல்ஜியம் மன்னர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
பெல்ஜியம் மன்னர் பிலிப் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் ஏழு நாள் அரசுமுறை பயணமாக கடந்த ஞாயிறன்று புதுடெல்லி வந்தடைந்தனர். நேற்று, யமுனை ஆற்றங்கரையில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப்பார்த்த இருவரும் அங்கு ஜோடியாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின், இருவரும் ஜனாதிபதி மாளிகை வந்தடைந்தனர். அங்கு முப்படைகள் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் இன்று காலை முதல் புகையுடன் கடும் பனிமூட்டம் நிலவி வரும் நிலையில் அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, பிரதமர் மோடியை சந்தித்து பேசிய மன்னர் பிலிப் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர், மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ்-ஐயும் அவர் சந்தித்து பேசினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply