பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து : 27 பேர் பலி
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கல்லார் காகர் பகுதியில் நேற்று இரவு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.ராய்விண்டில் நடைபெற இருந்த மத பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு 100-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சென்றுள்ளனர். பேருந்து இஸ்லாமாபாத்-லாகூர் சாலை வழியாக செல்வதாக இருந்தது. பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் இரவு 10 மணிக்கு மேல் அத்ந சாலை மூடப்பட்டது. எனவே, ஓட்டுநர் வேறு வழியாக சென்றுள்ளார். அவருக்கு அந்த பாதை பழக்கம் இல்லாததால் அங்கு பள்ளம் இருப்பதை கவனிக்கவில்லை. பேருந்தானது அந்த பகுதியில் இருந்த சரிவில் மிக வேகமாக செல்லும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 27 பேர் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த 69 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு பஞ்சாப் முதல்-மந்திரி சேபாஸ் ஷெரிப் உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply