அர்ஜெண்டினாவின் ராணுவ நீர்மூழ்கி கப்பல் 44 பேருடன் மாயம்
அர்ஜெண்டினாவை சேர்ந்த ராணுவ நீர்மூழ்கி கப்பல் கடந்த சில தினங்களுக்கு முன் படகோனியன் கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. தெற்கு அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென கப்பல் மாயமானது. கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் உள்பட 44 பேரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக கடற்படை அதிகாரிகள் கூறுகையில், தெற்கு அட்லாண்டிக் கடலில் மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடி வருகிறோம். கடந்த வியாழன் அன்று விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கடலில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அரசுகளும் கப்பலை தேடும் பணியில் உதவிசெய்து வருகின்றன. விரைவில் கப்பல் மீட்டு விடுவோம் என தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply