சீனாவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலி
சீனாவின் டாக்ஸிங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.சீனா தலைநகர் பீஜிங் அருகே டாக்ஸிங் மாவட்டத்தில் இருக்கும் ஜிங்ஜியான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு தாமதமானதன் காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்தது. 6 மணி நேரம் தாமதமாக வந்த மீட்புக்குழுவினர் தீயை போராடி அணைத்தனர்.
இந்த கோர விபத்தில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும், சந்தேகத்தின் பெயரில் சிலரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply