லண்டனில் சுரங்க ரெயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

மத்திய லண்டனின் ஆக்ஸ்ஃபோர்டு தெரு முக்கிய சந்தை பகுதியாகும். இங்கு பல கடைகள் அமைந்துள்ளன. அதனால் எப்போதும் இப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.இப்பகுதியில் டியூப் ஸ்டேஷன் எனப்படும் ஒரு சுரங்க ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்தில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை சுமார் 4:30 மணியளவில் துப்பாக்கிச்சூடும் சப்தம் கேட்டதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார், அந்த ரெயில் நிலையத்தை மூடினர். பொதுமக்கள் அனைவரையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர். அப்பகுதியில் உள்ள கடைகளையும் மூடுமாறு போலீசார் உத்தரவிட்டனர். மேலும் ஆக்ஸ்ஃபோர்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் லண்டன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போலீசார் பலத்த பாதுகாப்புடன் ரெயில் நிலையத்திற்குள் சென்றனர். ஆனால் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான எந்த அடையாளமும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் அந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply