வாக்குரிமையை உறுதிப்படுத்துவது கட்டாயம்
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைகளை எதிர்வரும் (30/11/2017) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஏற்றுக் கொண்டே நீதிமன்றம் இத்தீர்மானத்துக்கு வந்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் குறித்த 2017 பெப்ரவரி மாதம் (17) வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கடந்த (22/11/2017) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேல்நீதிமன்றம், சிக்கலுக்குரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்ததுடன், அடுத்த வழக்கு விசாரணைகளை டிசம்பர் (04/12/2017) ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (27/11/2017) வழக்கை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் சார்பில் மீளாய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. மக்களின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாய தேவை இருப்பதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ள சட்டமா அதிபர், தேசத்தின் முக்கியத்துவம் கருதி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்த மனுமீதான விசாரணையை (30/11/2017) விசாரணைக்கு எடுக்குமாறு கோரியிருந்தார்.
குறித்த ரிட் மனுவை தள்ளுபடி செய்வதுடன், அடுத்த விசாரணையின்போது இடைக்காலத் தடையுத்தரவை நீடிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலினால் பாதிக்கப்படாத 133 உள்ளூராட்சி மன்றங்களில் 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணங்களை (27) முதல் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. அத்துடன், மேலும் 40 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் தட்டச்சுப் பிழைகளை திருத்துமாறு ஆணைக்குழு கோரியிருப்பதாகவும் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார். நேற்று (27) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply