இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மாத்தளை மற்றும் கண்டி ஆகிய இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.மேலும், மாத்தளை மாவட்டத்தில் லக்கல, பள்ளேகல, அல்கடுவ மற்றும் கண்டி மத- தும்பர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மில்லிமீற்றரை விட அதிகரித்துள்ளதனால் , மேலும் மழை தொடருமாயின் மண்சரிவு, பாறை விழுகை, நிலவெட்டுசாய்வு மற்றும் தரை உள்ளிறக்கம் என்பன தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களை வேண்டிக்கொண்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply