நூற்றாண்டை கடந்து நிற்கும் ஒரு ரூ
தற்போது கலர் கலராக ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வந்தாலும் இதற்கான முன்னோடியாக விளங்கி வருவது 1917-ம் ஆண்டு அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டு என்பதை நாம் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. ரூபாய் நோட்டு இல்லாத டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி இந்தியா சென்று கொண்டு இருக்கிறது. ஆனாலும் ரூபாய் நோட்டுகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. தற்போது ஒரு ரூபாய் நோட்டை கண்ணில் பார்ப்பது என்பது அரிதாகி விட்டது.
ஒத்த ரூபா கூட இல்லையா? என்பது வழக்குச் சொல்லாக இன்றும் இருந்து வருகிறது. அந்த ஒத்த ரூபாய் நோட்டுதான் தற்போதைய புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கெல்லாம் முன்னோடி என்று சொல்லலாம்.
இந்தியாவில் கடந்த 30-11-1917-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் 101 வயது ஆகிறது. இரு பக்கமும் அச்சிடப்பட்ட முதல் நோட்டும் இதுதான். அதில் 5-ம் ஜார்ஜ் மன்னரின் உருவம் அச்சிடப்பட்டு இருக்கும்.
முதல் ஒரு ரூபாய் நோட்டில் கப்பே, மெக் வாட்டர்ஸ் மற்றும் டென்னிங் உள்ளிட்ட 3 பிரிட்டிஷ் நிதி செயலாளர்களின் கையெழுத்து போடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த 1935-ம் ஆண்டு முதல், நோட்டு அச்சிடும் முழு அதிகாரத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றது. முதலில் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டில் தமிழ் உள்பட 8 மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. தற்போது வெளியாகும் ரூபாய் நோட்டுகளில் 15 மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதன்பின்னர், 1940-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட 1 ரூபாய் நோட்டில் 6-ம் ஜார்ஜ் மன்னரின் உருவம் வெளியிடப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு வெளியான நோட்டில் அப்போதைய நிதித்துறை செயலாளர் கையொப்பம் இடம் பெற்றது. ஜார்ஜ் மன்னருக்கு பதிலாக அசோக் ஸ்தூபி சின்னம் இடம் பெற்றது.
1952-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரையிலும், 1958-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரையிலும், 1982-ம் ஆண்டிலும் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவில்லை. மீண்டும் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது. எனவே, பாரம்பரியம் மிக்க ரூபாய் நோட்டுகளின் வரலாற்றை அறிந்து அவற்றை போற்றி பாதுகாப்போம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply