லண்டன் மேயர் சாதிக் கான் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகை

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகியதற்குப் பிறகு ஏற்பட்டுள்ள புதிய வர்த்தகச் சூழலில், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உள்ள சாதக அம்சங்களை விளக்கும் நோக்கில் இருநாடுகளின் 6 நகரங்களிலும் லண்டன் மேயர் சாதிக் கான் 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தியாவில் மும்பை, தில்லி, அமிருதசரஸ் ஆகிய நகரங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவர், மூத்த அரசியல் தலைவர்கள், முன்னணி தொழிலதிபர்கள், பிராந்தியத் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். அவருடன், வர்த்தகத்துக்கான துணை மேயர் ராஜேஷ் அகர்வாலும் வருகை தர உள்ளார்

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி ஆகிய நகரங்களிலும் சாதிக் கான் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

வர்த்தக முதலீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக மேயர் சாதிக் கான், துணை மேயர் ராஜேஷ் அகர்வால் ஆகியோர் அந்த நகரங்களில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply