ஆர்.கே.நகர் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம்: விஷாலுக்கு ஆதரவு திரட்டுவாரா?
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து அரசியல் கட்சி தொடங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் கமலின் நிலைப்பாடு என்ன? அவர் யாருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து கமல் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். தன்னை ஒரு நாத்திகராக அறிவித்து எல்லா மதத்தினருக்கும் பொதுவானவர் போலவும் காட்டிக் கொள்கிறார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக அவர் தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு சில நாட்களாவது செல்லுமாறு அவருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன்படி இடைத்தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து கலந்து பேச முடிவு செய்துள்ளார். ஆளும் கட்சியின் தவறுகளை வாக்காளர்களிடம் எடுத்து சொல்லி நல்லவர்களுக்கு வாக்களிக்குமாறு அவர் பிரச்சாரம் செய்யலாம் என்று தெரிகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆயத்தமாகவும் அவர் ஆர்.கே.நகர் தேர்தல் களத்தை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளதால் அவருக்கு கமல் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக கமல் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே விஷாலை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. ‘பணம்’ வாங்கக் கூடாது. நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் என்ற கருத்தை மையமாக வைத்து ஆர்.கே.நகரில் பிரச்சாரம் செய்ய கமல் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அந்த பிரச்சாரத்தில் கமலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply