பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட நாள் விடுமுறை

வரவு செலவுத் திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் சட்டமூலங்கள் மற்றும் அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜனவரி 23ம் திகதி வரை ஒத்திவைக்கப்படும் எனச் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட அறிக்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஒருமாத காலமாக வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெற்றதுடன், கடந்த சனிக்கிழமை இறுதி வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply