நெதர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் பலி: தீவிரவாத தாக்குதலா? என விசாரணை

நெதர்லாந்து நாட்டின் மாஸ்ட்ரிச் நகரில் சில நிமிட இடைவேளையில் நடந்த இரண்டு கத்திக்குத்து தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது தீவிரவாத தாக்குதலா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் தெற்கு பகுதியில் இருக்கும் மாஸ்ட்ரிச் நகரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இரண்டு தாக்குதல்களுமே சில நிமிட இடைவேளையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவர் உயிரிழந்துள்ள நிலையில், 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற தனி நபர் தாக்குதல்கள் தொடர்ந்து நடப்பதால், இது தீவிரவாத செயலா? என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply