O/L பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்த இரண்டு மாணவர்கள் கைது
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.லுனுகம மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக தோற்றியிருந்த இரண்டு மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பரீட்சைக்கு தோற்றும் இரண்டு மாணவர்கள் பரீட்சை சுட்டிலக்கங்களை மாற்றிக் கொண்டு ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதாக குறித்த பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் லுனுகம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 17 வயது மற்றும் 18 வயதுடைய இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களும் இன்று பதுளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply