லசந்த கொலை – முன்னாள் OIC இரகசிய வாக்குமூலம்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.நேற்றையதினம் (21) கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் நிகார் முன்னிலையில் நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த வாக்குமுலம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதவான் முன்னிலையில் சுயாதீனமாக இரகசிய வாக்குமூலத்தை வழங்கத் தயார் என ஹேமந்த அதிகாரி கூறியதற்கு அமைவாக இந்த வாக்குமூலம் வழங்கப்பட்டதாகவும் குறித்த வாக்குமூலம் சுமார் 3 மணி நேரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சம்பந்தமான ஆவணங்கள் சில கல்கிஸ்ஸை பிரதேசத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரியின் ஆணையின் படி நீக்கப்பட்டுள்ளதாக இரகசியப் பொலிஸார் அண்மையில் நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply