ஐந்து மில்லியன் பெறுமதியான நாணயங்களுடன் இருவர் கைது

ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5685 குவைட் டினார் மற்றும் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பணமும் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மற்றும் சிலாபம் பகுதியை சேர்ந்த வர்த்தகர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply