வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வாஷிங்டன் டி.சி நகரின் பென்சில்வேனியா அவென்யூ பகுதியில் உள்ளது. உயர் பாதுகாப்பு பகுதியான இங்கு ரகசிய போலீஸ் பிரிவினர் எப்போதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பர். இந்நிலையில், வெள்ளை மாளிகையின் வடக்கு வேலியை ஒட்டி உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகலில் காரில் வந்த ஒரு நபர் தான் கொண்டுவந்த கைத்துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதும் பொதுமக்கள் சிதறி ஓடினர். உடனே, வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனை அடுத்து, தற்கொலை செய்து கொண்டவரின் உடலை அப்புறப்படுத்திய பின்னர் வெள்ளை மாளிகைக்கு செல்லும் வழிகள் திறக்கப்பட்டது. தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply