இராணுவத்தினருக்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை
இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் படையினரும், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதன்படி, பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இராணுவத்தினர், அவர்களது இராணுவ அடையாளங்களையோ, சீருடையுடனான அவர்களின் படத்தையோ, இராணுவ கருவிகள் மற்றும் நிறுவனங்களின் படத்தையோ பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய பாதுகாப்பு, அரசியல், மதம், இன நல்லிணக்கத்துடன் தொடர்புடைய விடயங்களைப் பதிவேற்றுவதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் இன்னொருவருக்கு மாற்றிக் கொள்வதற்கும் கருத்து வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளை மீறும் இராணுவ வீரர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply