அமெரிக்காவில் தங்கையை துப்பாக்கியால் சுட்ட 8 வயது சிறுவன்

அமெரிக்காவில் ஒகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ் லேண் பகுதியை சேர்ந்த பெண் அலிசா எட்வர்ட்ஸ் (27). இவருக்கு 8 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.நேற்று முன்தினம் அலிசா எட்வர்ட் வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் வீட்டில் குண்டுநிரப்பி வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து சரமாரி சுட்டான். அதில் அவனது 4 வயது தங்கை உடலில் குண்டு பாய்ந்தது.

இதனால் அவள் ரத்த வெள்ளத்தில் படுக்கையில் மயங்கி விழுந்தாள். இதுகுறித்து அவன் தனது தாயார் அலிசாவுக்கு தகவல் தெரிவித்தான்.

அவர் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்து குண்டு காயம் அடைந்த தனது மகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். மேலும் ரத்தக்கறை படிந்த படுக்கையை சுத்தம் செய்தார். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். துப்பாக்கியால் சுட்ட சிறுவன் கைது செய்யப்பட்டு குழந்தைகள் மையத்தில் காவலில் வைக்கப்பட்டான்.

தாயார் அலிசாவும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார் அஜாக்கிரதையாக துப்பாக்கி வைத்திருந்ததாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply