இலங்கை இனக்கலவரம் : சீனா கருத்து
இலங்கையில் உள்ள தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என நம்புவதாக சீனா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை சமாளிக்க கூடிய தன்மை இலங்கை அரசாங்கத்திற்கு இருப்பதாக நம்புகின்றோம். இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம்.
இலங்கை அரசாங்கம் மற்றும் நாட்டு மக்கள் தற்போதைய சூழ்நிலையை கையாளவும், இலங்கையின் சமூக ஸ்திரத்தன்மை, இன ஒற்றுமைக்கு ஆதரவளிப்பதாகவும் சீனா நம்புகிறது.
இதனிடையே, இலங்கையில் உள்ள தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply