மகளிர் தினத்தை விமர்சையாக கொண்டாடிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் பெண்களை கவுரவிக்கும் விதமாகவும் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் சர்வதேச மகளிர் தினத்தை நேற்று வெகு விமர்சையாக கொண்டாடியது.

இதுதொடர்பாக, லண்டனின் ஹீத்ருவில் இருந்து கிளாக்சோவுக்கு கடந்த திங்கட்கிழமை 61 பெண் ஊழியர்களை கொண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இயக்கப்பட்டது. இதில் விமான பைலட்கள், விமான ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என 61 பெண்களை கொண்டு இந்த விமானம் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதில் பயணம் செய்தவர்கள் கூறுகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விமானத்தில் பயணம் செய்ததை பெருமையாக கருதுகிறோம் என தெரிவித்தனர். டிவி நடிகையும் பைலட்டுமான கரோல் வோடர்மேன் (57), விமான நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு வரவேற்றுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply