யாழ் நகரில் நெல்சன் மண்டேலாவின் சிலை

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை ஒன்றை யாழ்ப்பாணம் நகரில் நிர்மாணிக்க இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரோபீனா பீ மார்க்ஸ் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நெல்சன் மண்டேலா என்பது சமாதானத்தின் அடையாளம் எனவும் அவரது சிலையை யாழ் நகரில் நிர்மாணிக்க யோசனை முன்வைத்தமை தொடர்பில் ஆளுநர், உயர்ஸ்தானிகருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பேச்சுவார்த்தையில் வடக்கு மாகாணத்தில் நடைபெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் சமய வேலைத்திட்டஙக்ள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply