பிரதமர் பதவிக்கு நான் தகுதியானவர் : ஜோன் அமரதுங்க
தான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என சுற்றுலா மற்றும் கிறிஸ்துவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக உள்ள சிரேஷ்ட அமைச்சர் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.வத்தளை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்ததாக அதிக ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரண்டாவது நபர் தான் என்றும் எனினும் பிரதமர் பதவியை கேட்கப் போவதில்லை எனவும் அவ்வாறு தந்தாலும் எடுக்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply