பேஸ்புக் மீதான தடை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கம்

முகப்புத்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த தினங்களில் முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.

இனவாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான கருத்துக்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி 13 ஆம் திகதி வைபர் மீது இருந்த தடையும் நேற்று நள்ளிரவு முதல் வட்ஸ்அப் மீது இருந்த தடையும் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply