என்.ஜி.ஓ. எமது எதிரியல்ல – அமைச்சர் மனோ கணேசன் விளக்கம்

அரச சார்பற்ற அமைப்புக்களை (NGO) எதிரிகளாக எடுத்துக் காட்டப்பட்டுள்ள பார்வையை மாற்றி, அந்த அமைப்புக்களை நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்த முன்வர வேண்டும் என இன நல்லிணக்க மற்றும் அரச மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிவில் சமூக அமைப்பு என்பது இந்நாட்டிலுள்ள சட்டத்துக்குப் புறம்பான ஒன்றுக்கு அல்ல. அவை அனைத்தும் இந்நாட்டின் நடைமுறையிலுள்ள சட்டத்தின் கீழ்தான் உள்ளன. சில அமைப்புக்கள் இந்நாட்டிலுள்ள நீதிமன்றத்துக்கும், பொலிஸாருக்கும் நடைமுறையிலுள்ள சட்ட வரையறைகளுக்கும் வெளியே சென்று செயற்படப் போய் மூக்கை உடைத்துக் கொண்டுள்ளன.

சில நிறுவனங்கள் நிதி தொடர்பில் பொறுப்பற்ற ஒரு போக்கைக் கையாள்கின்றன. இது போன்ற நிறுவனங்களில் பிரச்சினையுள்ளது. இதனால், இலங்கைக்கு கிடைக்கும் நிதி உதவிகள் குறைந்துள்ளன. இதன் பாதிப்பு பெரிய இடங்களிலுள்ளவர்களுக்கு அல்ல. சாதாரண பொது மக்களுக்கே ஆகும். கொழும்பிலுள்ள அதிசொகுசு வீடுகளில் இருக்கும் துறைமார்களுக்கு இந்த பாதிப்பின் தாக்கம் கிடையாது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

நுவரெலிய பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply