திகன வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த ஆதரவாளர்கள் : லக்ஸ்மன் கிரியெல்ல
கண்டி – திகன மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தாமரை மொட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவருக்கு தொடர்புகள் காணப்படுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரும் அறிந்திருந்ததாகவும், இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பொலிஸாருக்கு தாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அறிவுறுத்தல் வழங்கியதாகவும், எனினும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத்தவறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply