புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது
ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில், இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (05/04/2018) இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இவர், தற்போது, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் கீத் நொயார், கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி கடத்தப்பட்டார். இந்நிலையில், கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்ததாக அமல் கருணாசேகர மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply